Tuesday, 21 May 2013

அரிய தகவல்களைத் தேடுபவரா நீங்கள்? உங்களுக்காக இது!





                         எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. 


                         நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பதும் நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும்.  இதனால், நம் அறிவும் விசாலமாகிறது.  இது போன்ற தகவல்களை அன்றாடம் நமக்கு ஓர் இணையதளம் வழங்கினால் எவ்வளவு எளிதாக இருக்கும்.  இந்த இலக்குடனே ஓர் இணையதளம் இயங்குகிறது.  



அதன் முகவரி, 






                     இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, அன்றைக்குப் புதியதாக பதியப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகள் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றன.  



                    ஒவ்வொரு கண்டத்திற்கும் எப்படி அந்த பெயர் வந்தது என்ற சுவையான தகவல் தரப்பட்டிருந்தது




                    மேலும் சில தலைப்புகள்  உங்களுக்காக இதோ....













அரிய தகவல்கள் தேடுவோர் அவசியம் காண வேண்டிய இணைய தளம் இது..

அவன திருப்பிக் கடி -1


பச்சபுள்ள ஜோக்ஸ்







" ஏன்டா சட்டை போடாம வாக்கிங் போற?"






" டாக்டர்தான் என்னை டெய்லி வெறும் வயித்தோட நடக்கணும்னு சொன்னாரு! "





வியக்கவைக்கும் இணைய தளம் - கல்லூரி மாணவர்களுக்கு......







                 கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


                    இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள்.


                      இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி






                       இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 






                       உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. 






                        கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது.



           கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.



Note:-

  { மிக அருமையாக உள்ளது இத்தளம் }


 

இனிமேல் Windows 8 இல்லை, Windows Blue -தான்





                         விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகையில், உலகில் 67 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுவதாகவும், இவை யாவும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிவிடுவார்கள்' என்று நம்பிக்கையுடன் கூறினார், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி பால்மெர்



                       ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. பல மூலைகளிலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு எதிர்ப்பு வந்தது. குறிப்பாக, ஸ்டார்ட் மெனு இல்லாதது குறையாகச் சொல்லப்பட்டது. 



                       பொது ஜன தொடர்பு நிறுவனங்கள் மூலம், மைக்ரோசாப்ட் மக்களிடம் தன் புதிய சிஸ்டத்தினைக் கொண்டு செல்லப் பார்த்தது. எந்த முயற்சியும் பலனளிக்காததால், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை  விண்டோஸ் புளு ( Windows Blue )  என்ற பெயரில் வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்தன. 

 


தற்போது  விண்டோஸ் 8.1( Windows 8.1) என அது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




                   ஸ்டார்ட் பட்டனை நீக்கியது, அதற்குப் பதிலாகச்துர கட்டங்கள் வழி அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தந்தது, கம்ப்யூட்டர் இயக்கம் தெரிந்தவர்கள் கூட புதிய விஷயங்களைச் சிரமம் எடுத்து கற்க வேண்டிய நிலை ஆகியவற்றால், விண்டோஸ் 8 எதிர்பார்த்தபடி மக்களை அடையவில்லை. 






                       துரதிருஷ்டவசமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை உணர்ந்து கொள்ள ஆறு மாதம் பிடித்தது. மேலும், பல நிறுவனங்கள் தங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்திலேயே இயங்க முடிவெடுத்தன. இன்னும் பல பிரிட்டன் நிறுவனங்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்கிக் கொண்டுள்ளனர்.

எவ்வளவு சதவீதம் அன்பைக் காட்ட வேண்டும். - குட்டிக்கதைகள் - 7


குட்டிக்கதைகள் - 7







                             ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.

                               அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான்.குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

                            அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
 
                      அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.
 
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும் ,நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்